விஜய் மகனை தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குள் நுழையும் வாரிசு நடிகர்.. இயக்குநர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டனர்.
“பராசக்தி” போன்ற சிறந்த கதைக்களம் கொண்ட படங்களில் வசனம் எழுதி பிரபலமானவர் தான் கருணாநிதி.
இவர், மகனும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கடந்த 1987-ம் ஆண்டு வெளியான ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் கார்த்திக், பாண்டியன் உள்ளிட்ட பலர் பிரபலமான நடிகர்கள் நடித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து ஸ்டாலின் அரசியலில் பிஸியாக இருந்த சமயத்தில் அவருடைய மகனான உதயநிதி கடந்த 2012-ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான “ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
அதன் பின்னர், இது கதிர்வேலனின் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நாயகிகளுடன் நடித்திருக்கிறார்.
கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்த உதயநிதி தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஹீரோ வாய்ப்பு
இந்த நிலையில், தமிழ் சினிமா நடிகர்களின் வாரிசுக்கள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில், விஜய்யின் மகனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி சினிமாவில் நடிக்க போவதாக அவருடைய பாட்டி பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளனார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற இன்பநிதி இட்லி கடை திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இன்பநிதி, நடிப்புப் பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இன்பநிதி நடிக்கும் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார் என்றும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |