Bigg Boss Tamil 9: எவிக்ஷனுக்கு முன்பே பின் வாசலால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்
பிக் பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கு முன்பே பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றபட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் வெகு விமர்சையாக நடந்துகொண்டு வருகின்றது. இதற்கு மக்கள் மத்தியில் ஏதோ ஒரு வகையில் வரவேற்பு இருந்து வருகின்றது.
இதற்கு தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கி உள்ளார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களை எடுத்துள்ளனர்.
இதில் சிலர் நடிகர்களாகவும் உள்ளனர். அந்த வகையில் அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
வெளியேற்றபட்ட போட்டியாளர்
முதல் நாள் தொடக்கத்தில் இருந்தே பல சண்டைகளும் பஞ்சாயத்துகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆரம்பித்த 2 நாட்களிலேயே இந்த சீசன் விறுவிறுப்பாக இருந்து வருகிறது.
வரும் நாட்களில் போட்டி இன்னும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் முதல் வாரத்தின் எவிக்ஷனுக்கு முன்பே ஒரு போட்டியாளர் வெளியேற்றபட்டுள்ளார்.
தவிர்க்க முடியாத காரணங்கள் போட்டியாளர் நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவரே விலகிக்கொண்டிருக்கிறார்.
இவர் மற்றவர்களிடம் பேசுவது அன்பு காட்டுவது மற்றைய போட்டியாளர்கள் கேலி செய்வதை இவர் உணர்வுப்பூர்வமாக எடுத்துக்கொண்டுள்ளார்.
தனக்கு இந்த வீட்டில் இருக்க விருப்பமில்லை என்றும் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தன் கோரிக்கைக்கு இணங்க பிக்பாஸ் இவரை வெளியேற்றியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |