விஜய்யின் வெற்றி பற்றி கூறிய சௌத்ரி - பலித்த பேட்டி வைரல்
விஜயின் அரசியல் என்ட்ரி குறித்தும், அவரது வெற்றி குறித்தும் ஆர்.பி.சௌத்ரி பேட்டி ஒன்றில் முன்னரே கூறி உள்ளார்.

ஆர்.பி.சௌத்ரி
விஜய்க்கு நடிகராக அடையாளம் கொடுத்த திரைப்படம் ‘பூவே உனக்காக’. அந்தப் படத்தை தயாரித்தவர் சௌத்திரி தான்.
இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை உருவாக்கி உள்ளார். விஜய்யின் பல படங்களை தயாரித்தவர் சௌத்ரி தான். அவந்த படம் அனைத்தும் விஜய்க்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
இந்த நிலையில் ராஜஸ்தானில் நடந்த கார் விபத்தில் சௌத்ரி உயிரிழந்துள்ளார். இது திரை உலகில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

அவரது உடல் நாளை சென்னை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளை கடந்து பல திரைப்படங்கள் சௌத்ரியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவர் தயாரிப்பில் 98 படங்கள் வெளியாகியுள்ளன.
இப்படி இருக்க முன்னொரு பேட்டியில் விஜய்யின் வெற்றி பற்றி சௌத்ரி பேசிய பேட்டி வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

சௌத்ரியின் பேட்டி
இது தொடர்பாக ஆர்.பி.சௌத்ரி ஒரு வருடத்திற்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் குறித்து பேசியிருந்தார்.அவர் பேசும் போது “இன்றைய தேதியில சினிமா துறையில் விஜய், ராஜாவாத்தான் இருக்காரு.
எந்த ஒரு குறையும் அவருக்குக் கிடையாது. நல்லா சம்பாதிச்சுக்கிட்டிருக்கும்போதே அவர் அரசியலுக்கு வராரு. அப்படின்னா மக்களை எந்தளவுக்கு நேசிப்பார்? முழுக்க முழுக்க சேவை பண்ணத்தான் அரசியலுக்கு வர்றார்.

அதனால் அவர் எந்த பயனையும் எதிர்பார்க்கவில்லை. சினிமா துறையை போலவே, அரசியலிலும் அவர் வெற்றி பெறுவார் என்று எனக்கு நம்பிக்கை உண்டு.
ஆனா, எப்போ என்ன நடக்கும்னு தெரியாது. திடீர்ன்னு அவர் மனசு மாறி கூடுதலா படங்களும் நடிக்கலாம்.” என் று பேசி உள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |