லட்சங்களில் மாறிய விஜய்யின் சம்பளம்! கோடிகளில் புரண்டவருக்கு வேறு என்ன சலுகைகள் உண்டு?
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் சம்பள விபரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்வின் தவெக கட்சி 108 இடங்களை வென்று ஒட்டுமொத்த தமிழகத்தினையும் வாயடைக்க வைத்துள்ளது.
இதனால் அக்கட்சியின் தலைவரான விஜய் நாளை பொறுப்பேற்க உள்ளார். இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இருந்த விஜய், தற்போது பதவியேற்ற இன்னும் சில இடங்கள் தேவைப்படுகின்றது.
இதனால் சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினை தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ளார். விஜய் நடிகராக இருந்த ஆரம்ப காலத்தில் 500 ரூபாய் சம்பளம் வாங்கிய இவர் தனது கடைசி படமான ஜனநாயகத்தில் 275 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.

ஒரு படத்திற்கு 100 முதல் 275 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார். தற்போது மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வந்த விஜய்க்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் பிற சலுகைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வரின் மாத சம்பளம்
தமிழகத்தில் முதலமைச்சரின் சம்பளம் ரூ.2.05 லட்சம் வழங்கப்படுமாம். இதுவரை கோடியில் சம்பளமாக பெற்ற விஜய் தற்போது ஒரு வருடத்திற்கு 24.6 லட்சம் சம்பளம் மட்டுமே வாங்க போகின்றார்.
அதாவது 2036ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினை 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயயித்துள்ள நிலையில், விஜய்க்கு சில சலுகைகளும் பெறுகின்றார்.

அரசு சார்பில் தங்குவதற்கு தனி வீடு, குண்டுகள் துளைக்காத சிறப்பு வாகனங்கள், Z Plus பாதுகாப்பு, முதல்வர் மற்றும் முதல்வர் குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு, தொலை தொடர்பு வசதிகள், முதல்வருக்கான பயண செலவும், வீடு மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் என்று வழங்கப்படுகின்றதாம்.
மேலும் தனி ஹெலிகாப்டர் வசதி மற்றும் விமான செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்ளுமாம். நடிகர் விஜய்யின் கடைசி சொத்து மதிப்பு 600 கோடிக்கு மேல் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


விஜயின் சொத்துமதிப்பு
விஜய் தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்களின்படி, அவரது பெயரில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.404 கோடியாக உள்ளது. அசையா சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.220.15 கோடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.76 கோடிக்கு கடன் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |