துருக்கி நிலநடுக்கம்! கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே பிறந்த அதிசய குழந்தை
துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ள நிலநடுக்கத்தில் இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்னும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வரும் சூழலில், இறந்த உடல்களுக்கு மத்தியில் அதிசயமாய் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
துருக்கி - சிரியா நிலநடுக்கம்
துருக்கியில் சிரியாவின் எல்லையில் திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டது முதல் நில நடுக்கம் எற்பட்டுள்ளது. அதன் பிறகு பிற்பகல் வேளையில் 7.5 ரிக்டர் அளவில் அடுத்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில அதிர்வில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கி உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் ஆரம்பித்து இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
மேலும், இதற்கு முன்னர் 1939ஆம் ஆண்டு கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காவு வாங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 7 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துக்கொண்டிருக்கிறது.
இது இன்னும் உயர்வடையக்கூடும் என கூறப்படுகிறது.
அதிசய குழந்தை
இந்த நிலநடுக்கத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் துருக்கியில் உள்ள ஒரு இடத்தில் இடிபாடுகளில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர், குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் உலக நாடுகளை அனுதாபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
குறித்த கர்ப்பிணிப் பெண் நிலநடுத்தின் போது மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது.
அப்போது அதில் சிக்கிய பெண் தான் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். மேலும் அந்தப் பெண் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது.
பிறந்தக் குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்தக்குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு ஓமடம் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
One of the youngest survivors of the earthquake in Turkey. One baby that was rescued in Aleppo was born under the rubble (video) #Turkey #Turkiye #TurkeyEarthquake #earthquaketurkey #Syria #Syrie pic.twitter.com/ZdCorQ2vQo
— REPORT WAR (@troy_dalio) February 6, 2023