15 நாட்களின் பிரிவிற்கு பிறகுதான் இந்த முடிவை எடுத்துள்ளார்: துனிஷாவின் தாயார் சக நடிகர் மீது புகார்!
பிரபல பொலிவூட் நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் துனிஷா சர்மாவின் தாயார் சக நடிகர் ஷீஜான் மொகமத் கான் மீது புகார் அளித்துள்ளார்.
தற்கொலை செய்த துனிஷா
அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் துனிஷா சர்மா.
நேற்று முன்தினம் சனிக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், துனிஷாவின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துனீஷாவின் தாயார் புகார்
துனிஷாவுடன் நடித்து வந்த சக நடிகரான ஷீஜான் கான் என்பவர் மீது துனீஷாவின் தாயார் புகார் அளித்து உள்ளார்.
இதுபற்றி உதவி கமிஷனர் தலைமையிலான பொலிஸார் விசாரணை நடத்தினர். இதில், நடிகை துனீஷாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஷீஜான் கானை பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் நடிகர் ஷீஜான் கானை 4 நாட்களாக பொலிஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துனீஷாவை ஷீஜான் கான் ஏமாற்றி விட்டார். துனீஷாவுடன் முதலில் பழக தொடங்கிய ஷீஜான் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறினார். பின்னர் உறவை முறித்து கொண்டார்.
துனீஷாவுடன் பழகும்போதே அவருக்கு மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்துள்ளது. துனிஷாவை 3 முதல் 4 மாதங்கள் வரை ஷீஜான் கான் பயன்படுத்தி கொண்டார். அவரை பொலிஸார் தப்ப விட கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் ஷீஜான் கான் வாக்குமூலம்
ஷ்ரத்தா வாக்கர் கொடூர சம்பவத்திற்கு பின்னர், நாட்டில் காணப்படும் சூழ்நிலை மற்றும் அதன் பின்விளைவுகளை பார்த்தும் மற்றும் நமக்கு முன்பு தடங்கலாக இருக்கும் வெவ்வேறு சமூகம், வயது வித்தியாசம் ஆகியவற்றையும் துனீஷாவிடம் எடுத்து கூறினேன்.
அதனால், இந்த உறவை முறித்து கொள்ள முடிவு செய்தேன் என்று பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இருவரும் பிரிந்த பின்னர், ஒரு முறை துனீஷா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுபற்றி ஷீஜன் கான் கூறும்போது, துனீஷா தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றார்.
நான் தான் அவரை காப்பாற்றினேன். அதன்பின் துனீஷாவின் தாயாரிடம் அவரை நன்றாக கவனித்து கொள்ளும்படி கூறினேன் என்றும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பில் பொலிஸார் பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.