20 வயது இளம் நடிகை எடுத்த தவறான முடிவு: துணை நடிகர் கைது! அதிர்ச்சியில் திரையுலகினர்
பிரபல பொலிவூட் நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்திலேயே கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை துனிஷா சர்மா
அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’, ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் துனிஷா சர்மா.
நேற்று சனிக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் துனிஷா சர்மாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடிகை துனிஷா ஷர்மாவின் உடல் ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. உடற்கூறு பரிசோதனை அதிகாலை 4:30 மணி வரை நடத்தப்பட்டது. இந்த உடற்கூறு பரிசோதனையில் 4-5 பொலிஸாரும் உடனிருந்தனர்.
தற்கொலைக்கான காரணம்
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக துனிஷாவின் சக நடிகர் ஷீஜான் மொகமத் கான் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருவருக்கும் இடையே காதல் விவகாரம் இருந்ததாகவும், ஷீஜான் மொகமதுவின் தூண்டுதலின் பேரில் தான் துனிஷா தற்கொலை செய்துகொண்டதாகவும் நடிகையைின் தாய் புகார் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சகீன் மொகமதுவை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.