பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் துளசி! யாரெல்லாம் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சையில் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைகளில் துளசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உடல், மனம், ஆவி ஆகியவற்றை புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மை துளசி இலைகளுக்கு உண்டு.
மேலும் உடலின் அழுத்தங்களைச் சமநிலை செய்து உடலை பாதுகாக்கவும் துளசி பயன்படுகிறது.
இருப்பினும் இதனை குறிப்பிட்ட சிலர் அளவோடு எடுத்து கொள்வது நல்லது. இல்லாவிடின் இது உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடியதாக அமைகின்றது.
அந்தவகையில் துளசியை அதிகமாக எடுத்துகொண்டால் என்ன பக்கவிளைவுகளை உண்டாக்கும்? யார் எல்லாம் எடுத்து கொள்ள கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
துளசி தீங்கு விளைவிக்குமா?
துளசியில் யூஜெனோல் அதிகமாக உள்ளது. துளசியை அதிகமாக நுகரும் போது எடுத்துகொள்ளும் போது யூஜெனோல் அளவு அதிகரிக்க செய்யும். இவை உடலுக்கு அதிகமாக செல்லும் போது தீங்கு விளைவிக்க கூடியவை.
இருமலின் போது இரத்தபோக்கு உண்டாக்கும். விரைவான சுவாசத்தை கொடுக்கும். சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் துளசியை அதிகமாக நுகர்ந்ததால் வந்திருக்கலாம்.
உடலில் இரத்தத்தை மெல்லியதாக மாற்றும் தன்மையும் துளசிக்கு உண்டு. அளவாக எடுக்கும் போது இந்த பிரச்சனைகள் வராது. அளவுக்கு அதிகமாக எடுத்தால் இந்த பிரச்சனை வரலாம். உறைதல் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துகொள்பவர்கள் துளசியை சேர்க்க கூடாது.
நீரிழிவு கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் இரத்த சர்க்கரை குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் , நீரிழிவு கட்டுக்குள் இருக்க சற்று அதிகமான பவர்கொண்ட மாத்திரைகள் எடுப்பவர்கள் துளசியை எடுத்துகொண்டால் அது ஆபத்தான பக்கவிளைவுகளை உண்டாக்கும். இவர்களுக்கு தலைச்சுற்றல், பசி, பலவீனம், எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கும்.
ஆண்கள் அதிகமாக துளசியை சாப்பிடும் போது அவர்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகலாம்.
மட்டல், வாந்தி பதட்டம் ஆகியவற்றை குறைக்கும் மருந்துகள் எடுக்கும் போது துளசி எடுப்பது அதன் அம்னெசிக் விளைவை குறைக்கலாம். இது நெஞ்செரிச்சல், இலேசான தலைவலி மற்றும் குமட்டல் உணர்வை வெளிப்படுத்தும்.
யார் அதிகம் எடுத்து கொள்ள கூடாது?
கர்ப்பிணி பெண்கள் துளசியை அதிகமாக உட்கொள்வது தாய்க்கும் குழந்தைக்கு நீண்ட கால விளைவுகளை உண்டாக்கும்.
துளசி இலைகளை கர்ப்பிணிகள் அதிக அளவு நீண்ட காலம் எடுத்துகொண்டால் அது கர்ப்பிணி பெண்களுக்கு எதிர்வினைகளை தூண்டக்கூடும். துளசியை கருவுற்ற தொடக்கத்தில் சாப்பிடும் போது அது கருப்பை சுருக்கத்தை உண்டாக்க செய்யலாம்.
துளசியை தொடர்ந்து எடுக்கும் போது அது பிரசவம் அல்லது மாதவிடாய் காலத்தில் சிக்கல்களை உண்டாக்கும். கர்ப்பிணிகள் துளசியை அதிகம் எடுக்கும் போது முதுகுவலி, பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தபோக்கை உண்டாக்க செய்யலாம்.