உங்களது வீட்டில் இருக்கும் துளசி செடிகளில் இதையெல்லாம் தவறிக்கூட செய்திடாதீங்க! எதிர்மறையை ஏற்படுத்துமாம்
இந்து மதத்தில் துளசி செடிக்கு (Tulsi Plant) சிறப்பான முக்கியத்துவம் உண்டு. மகாவிஷணுவிற்கு உகந்த துளசி செடி பெரும்பாலான வீடுகளில் இருக்கும். துளசி செடிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தீபம் ஏற்றி, வழிபடும் பழக்கம் உள்ளது.
இருப்பினும், துளசி செடியை எந்த திசையில் வீட்டில் வைக்க வேண்டும் உள்ளிட்ட சில முக்கிய விதிகள் அனைவருக்கு தெரிவதில்லை.
துளசி செடியை வைக்க சரியான இடம்
மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி செடி இந்து மதத்தில் மிக புனிதமாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டில் ஒரு துளசி செடி (Tulsi Plant) இருந்தால், அதை பால்கனியில் அல்லது வீட்டின் ஜன்னலின் அருகில் வைக்கப்பட வேண்டும்.
மேலும் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் நடப்பட வேண்டும் என்று சொல்லுங்கள். தெய்வங்கள் இந்த திசைகளில் வசிப்பதாக நம்பப்படுகிறது என்பதால், இந்த திசையில் துளசி செடியை வைத்திருப்பது நல்லது.
- கற்றாழை மற்றும் முட்கள் நிறைந்த செடிகளை ஒருபோதும் துளசியுடன் சேர்த்து வைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- அமாவாசை, துவாதசி மற்றும் சதுர்த்தசி நாட்களில், துளசி இலைகளை பறிக்கக்கூடாது.
- ஞாயிற்றுக்கிழமைகளில் துளசிக்கு தண்ணீர் ஊற்றக் கூடாது.
- ஞாயிற்றுக்கிழமைகளில் துளசி இலைகளை பறிக்கக்கூடாது
- துளசி செடியை ஒருபோதும் நகத்தால் கிள்ளி எடுக்க க்கூடாது, மென்மையாக விரல்களால் பறிக்க வேண்டும்
- துளசி செடி காய்ந்திருந்தால், உடனே அகற்றி விட வேண்டும். ஏனெனில் காய்ந்த துளசி எதிர்மறை ஆற்றலை உருவாக்கும்.
- துளசி செடி காய்ந்து போய் விட்டால், அதை தொட்டியிலிருந்து அகற்றி ஆற்றில் விடவும்.
- துளசி இலைகளை கடவுளுக்கு சமர்பிப்பது நல்ல பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.
- துளசி இலைகளை விநாயகப் பெருமானுக்கு சமர்பிக்க கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
