தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் TTFவாசன்! ஆனால் அது கொலை.. பரபரப்பை ஏற்படுத்திய யூடியூப்பர்ஸ்..!!
யூடியூப் பிரபலமாக இருந்து ஹீரோவாக மாறிய டிடிஎப் வாசன் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வீடியோக்காட்சியொன்றை வெளியிட்டுள்ளார்.
யூடியூப் பிரபலங்கள்
சினிமா மற்றும் மீடியாத்துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு யூடியூப் மிகப்பெரிய தளமாக இருக்கின்றது.
அந்த வகையில் தனக்குள் இருக்கும் திறமையை குடும்பமாக ரீல்ஸ் போட்டு இன்றும் பல பிரபலங்கள் சம்பாரித்து வருகிறார்கள்.
இவர்களில் ஒருவர் தான் டிடிஎப் வாசன். இவர் “மஞ்சள் வீரன்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் கார் விபத்தில் சிக்கிய நிலையில், இது குறித்து டிடிஎப் வாசன் பேசிய போது, நான் தற்கொலை செய்து கொண்டேன் என்ற செய்தி வெளியில் வந்தால் அது தற்கொலை அல்ல. கொலை என புரிந்து கொள்ளுங்கள்..” என பேசியுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வேன்..
இது குறித்து தேடிய போது, டிடிஎஃப் வாசனும் அவரின் பட இயக்குநரும் காரில் பயணித்து கொண்டிருந்த போது கார் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகிய அப்போது முன்னாள் இருந்தவருக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது.
அப்போது நாங்கள் காரை விட்டு அவரை வண்டி பிடித்து மருந்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை வழங்கினோம்.
ஆனால் உண்மை தெரியாத பல பிரபலங்கள் நாங்கள் மது அருந்தி விட்டு காரை செலுத்தியதாகவும், நான் தான் காரை ஓட்டியதாகவும் அவர்களின் சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகின்றேன். நான் இப்போது தற்கொலை செய்து கொண்டால் அது தற்கொலை அல்ல இவர்கள் சேர்ந்து செய்த கொலை என புரிந்து கொள்ளுங்கள்..” என விளக்கம் கொடுத்துள்ளார்.
வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள் TTF வாசனுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |