யூடியூபர் TTF வாசனின் முதல் திரைப்படம்: படத்தின் பெயர் இதுதானாம்
சர்ச்சைக்குரிய பிரபல யூடியூபர் TTF வாசனின் நடிக்கும் முதல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருந்தது, இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிச்சியடைந்த வண்ணம் இருக்கிறார்கள்.
யூடியூபர் TTF வாசன்
தற்போது இருக்கும் நவீன தொழிநுட்பத்தால் பலரும் எதையாவது செய்து பிரபலமாகி விட்டார்கள். அப்படி பிரபலமானவர் தான் யூடியூபர் TTF வாசன்.
இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற சேனலில் பைக் ரைட் செய்து அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு இக்காலத்து இளைஞர்களின் மத்தியில் பிரபலமானார்.
இவர் யூடியூபில் மட்டுமல்ல சர்ச்சையிலும் மிகவும் பிரபல்யமானவர். இவரது யூடியூபில் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
முதல் திரைப்படம்
இந்நிலையில், இவர் சினிமாவில் நடிக்கப் போகிறாரா என்றக் கேள்வி அண்மையில் ஓடிக் கொண்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அவரின் பிறந்தநாள் தினமான இன்று TTF வாசன் நடித்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்தது இதனால் இவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.
மேலும், அவர் அறிமுகமாகியிருக்கும் திரைப்படத்தின் பெயர் மஞ்சள் வீரன். இத்திரைப்படத்தை செல்அம் இயக்கியிருக்கிறார். தி பட்ஜெட் பிலிம் கம்பேனி நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்தப் போஸ்டரில் 299 கிலோமீட்டர் வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு அவரது ரசிகர்கள் பெரும் வரவேற்புக் கொடுத்து வந்தாலும் இத்திரைப்படம் ரஜினியின் அண்ணாத்த திரைப்பட காப்பியாகத் தான் இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |