கார் விபத்தில் பிரபல நடிகை மரணம்! இரங்கல் தெரிவித்து வரும் ரசிகர்கள்
கார் விபத்தில் சிக்கி பெங்காலி நடிகை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார் விபத்தில் சிக்கிய நடிகை
பாலிவுட் திரை உலகில், 'சாராபாய் சாராபாய்' என்ற சீரியல் மூலம் அறிமுகமான நடிகை வைபவி உபாத்தியாயாவிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வைபவி அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
பாலிவுட் சீரியல்களில் நடித்து வருவது மட்டுமின்றி, சில திரைப்படங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்திற்கு தன்னுடைய வருங்கால கணவருடன் சுற்றுலா சென்ற நிலையில், இவர்கள் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாரிய பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதில் வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் இவரது வருங்கால கணவர் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்தினால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
மேலும் மறைந்த மறைந்த நடிகைக்கு பாலிவுட் சீரியல் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.