உண்மைக் காதல் எப்படி இருக்கும்...?
காதல் என்பது ஒரு மகிழ்ச்சியான உணர்வு. ஒவ்வொருவரது வாழ்விலும் திருப்புமுனையாக அமைவது காதல்தான்.
சிலரது வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு செல்லும், ஒரு சிலரது வாழ்வை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அது அவரவர் தேர்ந்தெடுக்கும் நபர்களைப் பொறுத்தே அமையும். ஆனால், இரும்பு இதயத்தையும் உருக வைக்கும் சக்தி காதலைத் தவிர வேறு ஒன்றுக்கும் இல்லை என்பது உண்மை.
அன்பு அனைத்தையும் மாற்றியமைக்கும் சக்தி பெற்றது. அதில் எந்தவித சுயநலமோ போலித்தன்மையோ இருக்காது.
சரி தற்போது உண்மையான காதலில் இருக்கும் 5 விடயங்களைக் குறித்து பார்ப்போம்...
எதிர்பார்ப்பற்ற அன்பு
இருவருமே எந்தவிதமான எதிர்ப்பார்ப்புமின்றி அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும். நிபந்தனைகளற்ற அன்பே உறவுகளை வலுப்படுத்துகிறது. அவ்வாறான அன்பு உங்களிடம் இருந்தால் நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலியை அதிகமாக நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
துணையாக இருத்தல்
தனது துணையின் மீது உண்மையான அக்கறை கொள்வதும், அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்வதும், அவர்கள் எதிர்கொள்ளும் கடினமான காலத்தில் அவர்களோடு இருப்பதும் மிகவும் முக்கியமாகும்.
உதவி
தன்னால் முடிந்தளவு தனது துணைக்கு உதவியாக இருப்பது. அவர்களின் தேவை என்னவென்று புரிந்து தனது முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.
தியாகம்
தியாகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தனது நேரம், உடைமைகள் என்பவற்றை நாம் அன்பு செலுத்தும் நமது துணைக்காக தியாகம் செய்தல்.
மன்னிப்பு
உலகில் மிகவும் சிறந்த ஒரு விடயமென்றால் அது மன்னிப்பு தான். ஒரு உறவை தக்க வைத்துக்கொள்வதற்கு இருக்கும் ஒரே ஒரு பிடிமானம் என்றால் அது மன்னித்தல் தான். மனதிலுள்ள கோபம், வெறுப்பு என அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு தனது துணையை மன்னித்து ஏற்றுக்கொள்ள அவர்கள் மீது மிகுந்து அன்பு வைத்திருக்க வேண்டும்.
ஒரு உண்மையான காதலில் இத்தனை விடயங்களும் நிச்சயமாக இருக்கும். எனவே காதலிப்பது முக்கியமல்ல. உண்மையாக காதலிக்க வேண்டும் என்பதே முக்கியம்.