மாதுளம் பழம் சாப்பிட்டால் இந்த பிரச்சினை வராதது உண்மை தானா?
மாதுளம் பழம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப்பட்டவை.
மாதுளம் பழம் பழங்களிலே மிகவும் பழமையானது.மருத்துவக்குணம் மற்றும் அழகை கொடுக்கக்கூடிய இந்த பழம் ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.
மாதுளை பழத்தில் உள்ள வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வீக்கத்தை குறைக்கவும் செய்கின்றது.
இந்த வகையில் தினமும் காலையில் நான்கு டேபிள் ஸ்பூன் மாதுளை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம் மற்றும் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என பல பதிவுகளில் அவதானிக்கிறோம். இதில் இருக்கும் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
மாதுளம் பழம்
தினமும் காலையில் நான்கு ஸ்பூன் மாதுளை சாப்பிட்டடால் உடல் எடையை குறைக்கலாம் என்று கூறப்பட்டாலும், அதற்கு சரியான உடற்பயிற்சி, வாழ்க்கை முறையினை பின்பற்ற வேண்டும்.
மாதுளை பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் இருந்தாலும் இதுபோன்று ஆதாரமின்றி கூறும் எந்த தகவல்களையும் நாம் மிகுந்த எச்சரிக்கையோடே அணுக வேண்டும்.
மாதுளம் பழம் சாப்பிட்டால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும் என்றாலும், நாம் உண்ணும் உணவில் மட்டும் இதற்கு காரணம் இல்லை. மரபணு, ஹார்மோன் சமநிலை, ஊட்டச்சத்து, ஆரோக்கியமான உடல்நலம் போன்றவை முடி வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கின்றது.
நீடித்த ஆரோக்கியமான உடல்நலத்திற்கு சரிவிகித உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையும் பின்பற்றுவது அவசியம்.