குழந்தைகளுக்கு காதில் சீழ் வடிவது ஏன் தெரியுமா? ஜாக்கிரதை
குளிர்காலங்களில் குழந்தைகளுக்கு காதில் சீழ் வடிதல், கடுமையான காதுவலி, காது வீங்கிப் போதல் ஆகிய பிரச்சினை அடிக்கடி ஏற்படும்.
குழந்தை பருவத்தில் ஏற்படும் மிகப் பெரிய பிரச்சினையாக இது பார்க்கப்படுகின்றது. இதனால் அவர்களின் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
காதுகளில் இருந்து அழுக்கு நிறத்தில் நீர் வெளியாதல் அல்லது மஞ்சள், பச்சை நிறத்தில் கெட்டியான திரவம் வெளியாதல் ஆகியவையே “சீழ் வடிதல்” என அழைக்கப்படுகின்றது.
மேலும் காதுகளிலிருந்து மெழுகு அல்லது ரத்தம் வெளியேறுவது நடுக்காது பகுதியில் இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றது.
அந்த வகையில் காதுகளில் இப்படியான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
சீழ் வடிதல்
பள்ளி அல்லது வீட்டில் குழந்தைகளுக்கு இப்படியான அறிகுறிகள் இருந்தால் உடனே சென்று மருந்துவரை பார்ப்பது சிறந்தது. ஏனெனின் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பின்னர் வெளியில் செல்வதற்கு கூட வெட்கப்படுவார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றி விட்டால் அதிலிருந்து மணம் வர ஆரம்பித்து விடும்.
குச்சி. பேப்பர், கோழி இறகு, பென்சில், பட்ஸ் ஆகிய பொருட்களை கொண்டு காதுகளை சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டாம். இதன் வழியாக கூட காதுகளுக்குள் கிருமிகள் செல்ல வாய்ப்பு இருக்கின்றது.
சீழ் வழியாமல் எப்படி பாதுகாப்பது?
1. காது பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் எண்ணையில் நனைத்து பஞ்சை சுருட்டி காதுகளில் வைத்து கொள்ள வேண்டும்.
2. குளிர்காலங்களில் வெளியில் சென்றால் கண்டிப்பாக பஞ்சி வைத்து கொள்ள வேண்டும். அல்லது காது, கழுத்தை மறைக்கும் படி துண்டு ஒன்றை சுற்றிக் கொள்வது அவசியம்.
3. காதில் கடுமையான வலி, வீக்கம், சீழ் வடிதல் ஆகிய பிரச்சினை இருந்தால் கை வைத்தியத்தை முற்றிலும் தவிர்த்து விட்டு உரிய மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |