2023இல் இப்படி தான் நடக்கும்..! பாபா வாங்கா குழந்தை தொடர்பான கணிப்பு! மிரள வைக்கும் கண்டுபிடிப்புகள்
இயற்கையாக குழந்தை தரிப்பு மற்றும் குழந்தை பெறுதல் திறன் காலப்போக்கில் குறைவடைந்து செயற்கை குழந்தை வடிவமைப்பு சூழல் ஏற்படும் என மறைந்த பிரபல ஞானி பாபா வாங்கா தெரிவித்துள்ளார்.
குழந்தை பெறுதல் என்பதே வரம் தான், திருமணம் என்ற சடங்கின் மூலம் ஒரு பந்தம் உருவாக்கப்பட்டு, கலாச்சாரங்களின் படி கணவன் மனைவி இணைவதன் மூலமாக தோன்றும் கருவை தான் நாம் குழந்தையாக பெற்றெடுக்கிறோம்.
மேலும் இந்த குழந்தை ஒன்பது மாதங்கள் தாயின் வயிற்றில் உருவாகி, 10 வது மாதம் வெளியில் வருகிறது.
பாபாவின் கணிப்பு
இன்றைய நவீன வளர்ச்சியால் இந்த செயல்முறைக்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக பாபா வாங்கா கூறிய கூற்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதனால் நமக்கு பிறக்க போகும் குழந்தைகளை தாமாகவே வடிவமைத்துக் கொள்ள முடியும். மேலும் குழந்தைக்கான நிறம் முதல் வடிவம் வரை நீங்கள் தெரிவு செய்யலாம்.
இதனை தொடர்ந்து குழந்தையை இவ்வாறு ஒன்பது மாதங்கள் வைத்திருந்திருந்து எடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்திருந்தார்.
தற்போதைய நிலை
இந்த கூற்று உண்மையாகி விட்டது என்றே கூற வேண்டும். ஏனெனின் இந்த சோதனையை எக்டோ லைப் என்ற பெர்லின் தலைநகராக கொண்ட நிறுவனம் ஒன்று செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நமது வடிவமைக்கு ஏற்ப இந்த குழந்தை உருவாக்கப்படுவதாகவும், இதனை ஒன்பது மாதங்களுக்கு பிறகு நமது கையில் வாங்கிக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த நிறுவனத்தில் இருக்கும் தொழிநுட்பம் செயற்கை கருவறை போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் கருவறையில் இருப்பது போன்றே இருக்குமாம்.
இந்த வசதியால் ஒரு வருடத்திற்கு 30000 குழந்தை உருவாக்கப்படுவதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
மலட்டு தன்மைக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் இந்த முறையை பின்பற்றலாம் என எக்டோ நிறுவனம் ஒரு விளம்பரமொன்றையும் வெளியிட்டுள்ளது.
வைரலாகும் செய்தி
மேலும் இந்த செயற்கை முறை கரு வளர்ப்பு செயல்முறை சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழல் 'பாபுலேஷன் கிளிப்" எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த செய்தி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்ட வருகிறது. மேலும் குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு இது ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் பரவலாக பகிரப்படுகிறது.