இரட்டை குழந்தை பிறக்க ஆசையா? தம்பதிகள் செய்ய வேண்டியது இதுதான்!
பல தம்பதிகளுக்கும் இரட்டை குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும், கர்ப்ப காலத்திலேயே இரட்டையர்களின் ஒன்று ஆண், ஒன்று பெண், இரண்டும் ஆண், இரண்டும் பெண் என வீட்டில் செல்ல சண்டையே நடக்கும்.
தற்போதைய காலக்கட்டத்தில், இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில், இரட்டை குழந்தை பிறக்க இயற்கையாக ஏதேனும் சாப்பிடலாமா? என்ற கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு உதவி செய்யும்.
இரட்டை குழந்தைகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றனர்.
உருவ ஒற்றுமையுடைய குழந்தைகள்
உருவ வேறுபாடுடைய குழந்தைகள்
குறிப்பிட்ட விந்தணுவின் மூலமாக உண்டாகும் இருவேறு கருக்கள் ஒரே உருவ ஒற்றுமையுடன் இருந்தால் இரட்டையர்கள் ஆவார்கள்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? ஆபத்தான பிரச்சினை இருக்குமாம் ஜாக்கிரதை
இரட்டை குழந்தை பிறக்க காரணம்
பெண்களின் வயது அதிகமாகும் போது இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. 35 வயதில் குழந்தை பெற முயற்சித்தால் இரட்டையர்களுக்கான சாத்தியம் அதிகம்.
கருத்தரித்தல்
ஐ.வி.எப் எனப்படும் செயற்கை கருத்தரித்தலில் இரட்டை குழந்தை வாய்ப்புகள் இயல்பாகவே அமைகிறது. அதிலும் கருப்பையில் ஒன்றிற்கும் அதிகமான கருமுட்டை உருவாகும் நேரத்தில் இரட்டையர் வாய்ப்பு எளிதாகிறது.
பல நாடுகளில் IVF மூலமாக மூன்று அல்லது நான்கு குழந்தைகளை கருத்தரிக்க வைக்கும் நடைமுறையில் உள்ளன. கருத்தடை சாதனம், கருத்தடை மருந்துகளை எடுத்தால் அதனை நிறுத்தியதும் கருவுற முயற்சிக்கும் பட்சத்தில் இரட்டை குழந்தைகள் வாய்ப்புகள் அதிகம்.
அடுத்து, முதல் குழந்தை பிறந்து, இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கலாம் என்று எண்ணத்தில் இருக்கும் தம்பதிகள், முதல் குழந்தைக்கு அதிகளவு தாய்ப்பால் தர வேண்டும்.
மேலும், சர்க்கரைவள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு போன்றவற்றை சாப்பிட்டால், அவை இயற்கையான சத்துக்கள் வாயிலாக இரட்டையர்கள் பிறப்பை ஊக்குவிக்கும்.
இரும்புசத்து, கால்சியம், ஜின்க் சத்துள்ள உணவுகளான பாதாம், பேரீட்சை மற்றும் ஆரஞ்சு போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.