விஜய் படத்தை புத்தகமாக்கி அழகு பார்க்கும் லோகேஷ்.. கடுப்பில் நெட்டிசன்கள்
லோகேஷ் கனகராஜ் லியோ பட கதையை புத்தகமாக்கி விற்பனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படம்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் தான் லியோ.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அத்துடன் இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் கைதி, விக்ரம் படங்களின் வரிசையில் லியோவும் லோகேஷின் LCU-ன் கீழ் உருவாகியிருந்தது. இதனால் ஆயிரம் கோடி வரை வசூல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இதன்படி, வெளியாகி முதல் நாள் சிறப்பான ஆரம்பத்துடன் 148 கோடி வரை வசூல் கிடைத்தது.
இந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல படம் சரியாக ஓடவில்லை.
முதல் பாதியை சரியாக கொடுத்த லோகேஷ், இரண்டாம் பாதியை சொதப்பி விட்டார் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர். இதனை அவரே பேட்டிகளில் ஒப்புக்கொண்டார்.

புத்தகம் வெளியீடு
இப்படியொரு நிலையில், லியோ படத்தின் திரைக்கதையை லோகேஷ் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
சென்னையில் தொடங்கிய 47வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் லியோ திரைக்கதை புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
லியோ திரைக்கதை சரியாக வரவில்லை என லோகேஷ் ஒப்புக்கொண்ட நிலையில் திரைக்கதையை புத்தகமாக்கியிருப்பது மோசடி என நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

அத்துடன் பலர், “ திரைக்கதை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான புத்தகமாக இந்த புத்தகம் இருக்குமோ?,” என ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதே வேளை கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் திரைக்கதைகளும் புத்தகமாக சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |