பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதற்கு இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும்.
அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் காலில் அணியும் கொலுசு வெள்ளியில் தான் அணிய வேண்டும் என கூறியமைக்கு என்ன காரணம் என சிந்தித்திருக்கின்றீர்களா?
காலில் அணியும் ஆபரணம் தங்கத்தில் இருப்பது பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆனால் வெள்ளியை காலில் அணிந்தால் பல்வேறு மருத்துவ பலன்கள் கிடைக்கின்றது.
இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை. வெள்ளி கொலுசு அணிவதால் கிடைக்கும் மருத்துவ பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளி கொலுசு அணிவதால்...
வெள்ளி கொலுசு அணிவது பாதங்களை அழகாக்கும்.தற்காலத்தில் பெண்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், குழந்தையின்மை, கால் வலி என பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்.
ஆனால் பெண்கள் வெள்ளி கொழுசு அணிவதன் மூலம் இது போன்ற பல பிரச்சனைகளில் இருந்து எளிதாக நிவாரணம் பெறலாம். வெள்ளி உடலுக்கு குளிர்ச்சி தரும்.
இதனால் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். வெள்ளிக் கொலுசு அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உண்மையில் வெள்ளி கொலுசு அணிவதால் எலும்புகள் வலுவடையும்.
வெள்ளி கொலுசு கால்களைத் தொடும் போது, இந்த உலோக உறுப்பு தோலில் ஊடுருவி எலும்புகளை வலுப்படுத்துகின்றது. வெள்ளி கொலுசு அணிவதால் பெண்களின் ஹார்மோன் அளவை சமன் செய்ய முடியும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது பல மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்துவதாகவும், கருப்பையை ஆரோக்கியமாக வைப்பதில் நன்மை பயக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால், பெண்கள் பொதுவாக கால் வலி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இந்த பிரச்சனையை வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் தீர்க்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |