துணையை காப்பாற்றியவர் ஜென்டில்மேன்! நடிகை த்ரிஷா பதிவில் யாரை கூறினார்?
நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை த்ரிஷா, தற்போது விஜய்யுடன் சேர்ந்து வெளியே சென்றுவருவதால் பெரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றார்.
ஆம் நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய்யுடன் இவர் சமீபத்தில் திருமண நிகழ்விற்கு சென்று வந்ததால், ரசிகர்களின் கேள்விக்கு ஆளாகினார்.
என்னதான் சர்ச்சை காணப்பட்டாலும் தனது வேலையில் எந்தவொரு தடையும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே இருந்து வருகின்றார்.
தற்போது இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள ஸ்டோரி ரசிகர்களை அதிகமாக பேச வைத்துள்ளது.

த்ரிஷாவின் தற்போதைய பதிவு
த்ரிஷா பதிவிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரியில், சமீபத்தில் வைரலான Punch குரங்கு பற்றிய பதிவே இதுவாகும். அம்மா விட்டுச் சென்ற நிலையில், தனக்கு எந்தவொரு ஆதாரவும் இல்லாமல் ஒரு பொம்மையை மட்டும் வைத்து சுற்றிக் கொண்டிருந்தது.

பொம்மையைக் கட்டிப்பிடித்து எந்நேரமும் Punch தூக்கிக்கொண்டு சுற்றிய காணொளி உலகம் முழுவதும் வைரலாகியது.
தற்போது பஞ்ச் குரங்குக்கு புது தோழி கிடைத்திருக்கும் நிலையில், அதை காப்பாற்ற மற்றொரு குரங்குடன் punch சண்டை போட்ட லேட்டஸ்ட் வீடியோவுக்கு தான் த்ரிஷா கமெண்ட் செய்து இருக்கிறார். "Now thatz a gentleman" என த்ரிஷா பதிவிட்டுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |