நடிகை தேவயானியின் மகளா இது? புடவையில் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படம்
நடிகை தேவயானியின் மகள் இனியாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை தேவயாணி, இயக்குனர் ராஜ்குமாரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த மகள் இனியா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகை என்பதையும் தாண்டி சிறந்த அம்மாவாக நடிகை தேவயானி இருப்பது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் அப்பா இயக்குனர், அம்மா நடிகை என இசையமைப்பாளர்களிடம் நேரடியாக சென்று வாய்ப்பு கேட்கவில்லை.
சாதாரண குடும்ப பிள்ளைகள் போன்று போட்டியின் மூலம் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்றே தேவயானி விரும்பினார்.

அதே போன்று சரிகமப 5வது சீசனில் மகளை ஒவ்வொரு வாரமும் அழைத்து வந்து, பாட வைத்து அழகு பார்த்தார். இந்நிலையில் தேவயானி மகள் இனியாவின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படத்தில் அவர் புடவையில் அசத்தியுள்ளதைக் கண்ட ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |