இன்று 40ஆவது பிறந்தநாளை கொண்டாடும் த்ரிஷாவின் விபரீத ஆசை... அடடே இதுதானா அந்த ஆசை?
முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. தனது அழகாலும் நடிப்பாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருக்கிறார்.
'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் அறிமுகமான த்ரிஷாவின் மார்க்கெட் இன்னும் குறையாமல் இறங்காமல் அப்படியே இருக்கின்றது.
image - News 18
இந்நிலையில் நடிகை த்ரிஷா இன்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
த்ரிஷா, சில படங்களை நடித்ததன் பின்னர் அவர் கொடுத்த பேட்டியின்போது, ஆண்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது,
அதற்கு பதிலளித்த த்ரிஷா, “ஆண்களை புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம். அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள், வெளியில் என்னவிதமாக நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி புரிந்துகொள்ளவே முடியாது.
image - pinkvilla
இந்நிலையில் ஒரு நாளாவது தான் ஆணாக பிறந்திருக்க வேண்டும் என்றும் இந்த ஆசையை தனது அம்மாவிடமும் கூறியிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த ஆசைக்கான காரணம் என்னவென்றால், ஆண்களின் மன நிலை, உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை உணரவேண்டும்.
இதற்காகவே ஆணாக பிறந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
image - News 18