அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா? அவரே ஓபனாக சொன்ன பதில்!
நடிகை த்ரிஷாவிடம் நீங்கள் அரசியலுக்கு வரப்போகிறீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு த்ரிஷா மிகத் தெளிவாக பதிலளித்துள்ளார்.

நடிகை த்ரிஷா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் பற்றி தற்போது பல சர்ச்சைகள் வலம் வருகின்றன. இதில் எதை நம்புவது எதை நம்பக்கூடாது என்பது எதுவும் தெரியவில்லை.
நடிகராக இருந்து தற்போது முதலமைச்சராக மாறிய விஜய்யுடன் நடிகை த்ரிஷா மிகவும் நெருக்கமாக இருப்பது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
விஜய் முதல்வர் ஆனதற்கு த்ரிஷா அவரை நேரில் சென்று வாழ்த்தி இருந்தார். இதன் பின்னர் பதவியேற்பிலும் அவர் கலந்துகொண்டார்.
ஆனால் விஜய்யின் மனைவியோ பிள்ளைகளோ கலந்துகொள்ளவில்லை. ஆனால் நிகழ்வில் விஜய்யின் தாய் தந்தை மற்றும் த்ரிஷா நெருங்கிய உறவாக மதிக்கப்பட்டார்கள்.

இப்படி இருக்க இணையவாசிகள் விரைவில் திரிஷா அரசியலில் வர வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதில் பெரம்பூர் தொகுதியை ஏற்று, திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு சிலர் இந்த தேர்தலுக்கு தவெகவினர் த்ரிஷாவை களமிறக்கப்போகின்றனர் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

த்ரிஷா சொன்ன பதில்
ஆனால் த்ரிஷா தன்னிடம் அரசியல் குறித்த கேள்விக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பதில் தெரிவித்து இருந்தார்.
நடிகை திரிஷாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

இந்த படத்தின் புரமோஷனின் போது திரிஷாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது நீங்க அரசியலுக்கு வருவீங்களா? அரசியல் நுணுக்கத்தோடு நீங்க குந்தவை கேரக்டர்ல நடிச்சிருக்கீங்க! என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதனால் உங்களுக்கு அரசியலில் நுழைய ஆர்வம் இருக்கிறதா? என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டிருந்தார்.

இதற்கு த்ரிஷா “சத்தியமா அதுக்கு வாய்ப்பே இல்லை நான் அரசியலுக்குள் வர மாட்டேன் அரசியல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதால் அதில் நான் எதுவுமே செய்ய முடியாது” என பதிலளித்து இருந்தார்.
விஜய்யுடன் த்ரிஷா மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்பதற்காகக த்ரிஷா சினிமாவை விட்டு விட்டு அரசியலுக்கு வரப்போகிறார் என்ற வதந்திகளுக்கு இந்த காணொளி நெத்தியடி பதிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |