விமானம் அருகில் வந்தும் சிலை போல் நின்ற சீன அதிகாரி! வைரலாகும் காணொளி
"ஏர் ஃபோர்ஸ் ஒன்" விமானம் சீனாவில் தரையிறங்கியபோது, அங்கு பாதுகாப்பிலிருந்த சீன அதிகாரி ஒருவர் சிலை போல் நின்றார்.

வைரல் காணொளி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள போது நிலையில், அவரை வரவேற்க நின்றிருந்த சீன ராணுவ அதிகாரி ஒருவரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிபர் பயணிக்கும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் பெய்ஜிங் விமான நிலையத்தின் தார்சாலையில் தரையிறங்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

அந்த மிகப்பெரிய போயிங் விமானத்தின் என்ஜின் மிக அருகாமையில் இருந்தபோதிலும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சீன ராணுவ அதிகாரி ஒருவர் கொஞ்சம் கூட அசையாமல், சிலை போல நேராக நின்று கொண்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது.
'இவ்வளவு பெரிய விமானம் அருகில் வரும்போது ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் நிற்பது மிகப்பெரிய பயிற்சி எனப் பலர் பாராட்டி வருகின்றனர்.

இன்னும் சிலர் "என் அருகில் அந்த என்ஜின் வந்திருந்தால் என் கால்கள் நடுங்கியிருக்கும் என கருத்து பதிவிட்டு வருகின்றது. குறிப்பிட்ட இந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.