த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய் சோதனை..நடந்தது என்ன?
நடிகை த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள செய்தி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நடிகை த்ரிஷா
தமிழ் திரைத்துறையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருபவர் நடிகை திரிஷா.
சமீபத்தில் நடிகை த்ரிஷாவிற்கும் முதலமைச்சர் விஜய்க்கும் இருக்கும் நட்பு சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாக பரவி வருகின்றது.
இப்படி இருக்க தேனாம்பேட்டையில் உள்ள திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தற்போது எச்சரிக்கை மெயில் வந்துள்ளது.

அதாவது வெடிகுண்டு மிரட்டல் டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வந்துள்ளது. இந்த மெய் எச்சரிக்கை வந்தவுடன் உடனே தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கபட்டு திரிஷாவின் வீட்டில் தேடுதல் வேலை ஆரம்பித்துள்ளது.
பாம் ஸ்குவாட் டீம் மற்றும் மோப்ப நாய் உதவிகளுடன் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.சோதனை முடிந்தது ஆனால் திரிஷா வீட்டில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.

திரிஷா வீட்டிற்கு மட்டுமின்றி. பங்களாதேஷ் துணை தூதரகத்திற்கும் இதுபோன்ற மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகை திரிஷாவின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்
இமெயில் மூலம் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர் யார்? எங்கிருந்து அந்த அச்சுறுத்தல் மெயில் வருகிறது என்பதை காவல் துறை தீவிர விசாரணை போட்டு தேடி வருகின்றது.
மெயில் வந்த ஐடி மூலம் அந்த நபரைக் கண்டறிய சைபர் க்ரைம் மூலமும் முயற்சித்து வருகின்றனர். அதில் மர்ம நபர் சிக்கினால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு. இதே போல. திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, இறுதியில் த்ரிஷா வீட்டில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கபட்டவில்லை.
தொடர்ந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |