சர்ச்சைகளுக்கு நடுவில் த்ரிஷாவின் கோபமான பதிவு! யாரை பற்றி சொல்கிறார்?
தமிழக தேர்தலில் வெற்றிபெற்றும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் நிலவிவரும் நிலையில் நடிகை த்ரிஷாவின் கோபமான பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
த்ரிஷா - விஜய் சர்ச்சை
நடிகரும் தவெக கட்சித்தலைவருமான விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் த்ரிஷாவை பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையாக கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்தது தான்.

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை தொடர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கு பிறகு பல்வேறு விமர்சனங்கள் அவர்கள் மீது வந்த நிலையில் அதை பற்றி த்ரிஷா எந்தவித விளக்கமும் இதுவரையில் கொடுக்கவில்லை.

தற்போது விஜய் முதல்வராக பதவி ஏற்பதிலும் சிக்கல் நிலவி வருகின்றது. இந்நிலையில் த்ரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் பலரும் பல்வேறு விஷயங்களை கிசுகிசு பேசிக் கொண்டிருப்பது போல காட்டப்பட்டிருக்கிறது.
எதற்காக இப்படி ஒரு பதிவை த்ரிஷா போட்டிருக்கிறார் என பல்வேறு தரப்பினரும் குழப்பம் அடைந்து கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.