அரிசியை வருட கணக்கில் கெடாமல் பாதுகாக்கும் அதிசய இலை! பாத்திரங்களில் போட்டு வைத்தாலே போதும்
அரிசி மிகவும் முக்கியமான உணவு ஆகும். அரிசியை மிக எளிதாக அதே நேரத்தில் குறுகிய நேரத்தில் சமைக்கலாம்.
ஆனால் நீண்ட காலம் அரிசிகெடாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியே.
அரிசியை பாதுகாப்பாக வைக்கவில்லை என்றால் அதில் கட்டிகள் அல்லது பூஞ்சைகள் விழுந்துவிடும் அல்லது அவற்றில் பூச்சிகள் உருவாகிவிடும். சிவப்பு அரிசியைவிட வெள்ளை அரிசி நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.
ஏனெனில் சிவப்பு அரிசியில் அதிக அளவு எண்ணெய் சத்து இருப்பதால் அது விரைவில் கெட்டுவிடுகிறது.
ஆனால் வெள்ளை அாிசியை 3 முதல் 4 ஆண்டுகள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும்.
ஆனால் சிவப்புஅரிசியை சமையல் அறையில் 8 மாதங்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம். அதே நேரத்தில் குளிா்சாதனப் பெட்டியில் ஒரு ஆண்டு வரை கெடாமல் வைத்திருக்கலாம்.
அாிசியை எவ்வாறு நீண்ட காலத்திற்கு கெடாமல் வைத்திருக்கலாம் என்பதற்கான குறிப்புகளை இங்கு பாா்க்கலாம்.
வேப்பிலை அல்லது காய்ந்த மிளகாய்
அரிசியை போட்டு வைத்திருக்கும் பாத்திரங்களில் வேப்பிலை அல்லது காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காமல் இருக்கும்.
4 அல்லது 5 வேப்பிலை அல்லது காய்ந்த மிளகாயை அரிசி பாத்திரங்களில் போட்டு வைக்கலாம். இந்த உத்தியை பெரும்பாலான பெண்கள் பின்பற்றி வருகின்றனர்.