இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு போறீங்களா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க
நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடியால் அவஸ்தைப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றன.
இதனை சரிச் செய்ய ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்.
அப்படி வெளிநாடுகளுக்கு வேலைச் செல்பவர்களுக்கு ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை சில பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதனை அவர்கள் முழுமைப்படுத்தியிருந்தால் மாத்திரமே வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல முடியும்.
அந்த வகையில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்களுக்கு பயிற்சிகளில் என்னென்ன விடயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என்பதை பதிவில் பார்க்கலாம்.
பயிற்சிகள் ஏன் வழங்கப்படுகிறது?
1. மொழிப் பயிற்சி
நீங்கள் எந்த நாட்டிற்கு வேலைக்கு செல்ல ஆயத்தமாக இருக்கிறீர்களோ, அந்த நாட்டின் மொழி உங்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். இது அங்குள்ளவர்களுடன் தொடர்பாடல் செய்ய அவசியமானது.
2. பணிசார் திறன் பயிற்சி
வெளிநாடுகளுக்கு நீங்கள், விண்ணப்பித்த வேலைகள் தொடர்பான பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக, வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு அதற்கு ஏற்றால் போன்று பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
3. கலாச்சாரப் பயிற்சி
நாம் பிறந்த வளர்ந்த நாட்டின் கலாச்சாரம், நம்முடை பழக்கங்கள் வெளிநாடுகளுடன் ஒப்பிடும் பொழுது முற்றிலும் வேறுப்பட்டவையாக இருக்கும். இதனை பயிற்சிகள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் அரேபிக் நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அவர்களின் பழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இது உங்கள் உயிரை கூட காப்பாற்றும்.
4. விபத்து தவிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பயிற்சி
வேலைச் செய்யும் இடத்தில் விபத்து ஏற்பட்டால், அதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதற்கு பாதுகாப்பு பயிற்சிகள் கொடுக்கப்படும். அப்படி அந்த இடத்தில் காயம் அல்லது பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதனை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கான முதலுதவி பயிற்சிகளும் வழங்கப்படும்.
5. தகவல் மற்றும் வழிகாட்டுதல்.
வெளிநாடுகளில் வேலைச் செய்பவர்கள் தங்களின் குடும்பத்திற்கு பணம் அனுப்ப வேண்டிய தேவை உள்ளது. அதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றது. உதாரணமாக, பணம் அனுப்புதல், வங்கிச் சேவை, மற்றும் வெளிநாட்டில் வாழும் போது ஏற்படும் சட்டச் சிக்கல்கள் ஆகிய முன்னரே கற்பிக்கப்படும்.
பயிற்சி எங்கு கொடுக்கப்படும்?
வெளிநாட்டுக்கு வேலைச் செய்யும் நீங்கள் ஒரு இலங்கையராக இருந்தால், உங்களுக்கான பயிற்சிகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) வழங்கும். இது இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பாகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயிற்சிகள் வழங்குவதற்காக இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள்
இலங்கையில், தனியார் பயிற்சி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இது குறிப்பிட்ட நாடுகளுக்கான பயிற்சிகளை வழங்குகின்றன. இவற்றின் தரத்தை மேம்படுத்த SLBFE விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
நோக்கம்
வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்பவர்களின் திறன்களை அதிகரித்தல். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தன்னை தற்காத்துக் கொள்ளவும். வேலைவாய்ப்பு சந்தையில் நல்ல வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளல். புதிய கலாச்சாரங்களை தெரிந்து கொள்ளல்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |