இனி இலங்கையில் பணக்காரர்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்.... பரிதாபமாக பலியாகும் ஏழைகள்!
இலங்கையில் தங்கம் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 4,199 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகவும் மற்றும் 2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 672 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அன்றாட உணவுகளுக்கே வழியில்லாமல் வாழும் ஏழை மக்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனி பணக்காரர்கள் மட்டும் தான் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
அது மட்டும் இன்றி, இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

எரிபொருளுக்காக காத்திருந்தே உயிரை இழக்கும் சூழலில் திடீரென்று லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டமை பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
