Top Cooku Dupe Cooku: ஈழத்தமிழனின் பாடல்... அரங்கமே மெய்சிலிர்த்த தருணம்
டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் முதல் தடவையாக ஈழத்து பிரபலமான வாகீசன் கலந்து கொண்டு, மண்ணின் மகத்துவத்தை பாடல் மூலம் காட்டியிருக்கிறார்.
டாப்பு குக்கு டூப் குக்கு
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் சீசனை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, இரண்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-ல் டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஈழத்தமிழன் வாகீசன்
இந்த நிலையில், சீசன் 2 -ல் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் சிவாங்கி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
மேலும் இரண்டாவது சீசனில் சீரியல் நடிகை டெலனா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை கிரண், நடிகை பிரியங்கா மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகிய 8 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய இலங்கை ராப் பாடகர் வாகீசன் இலங்கை தமிழில் பாடி அசத்தியுள்ளார். அவர் பேசியது மட்டுமல்லாமல் இலங்கை வாழ். தமிழர்களின் பெருமையை வெளிகாட்டும் வகையில் பாடலொன்றையும் பாடினார்.
இந்த பாடல் அங்கிருந்தவர்களை புல்லரிக்க வைத்துள்ளது. வாகீசன் என்றிக்கு பின்னர் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |