இந்த ராசி பெண்கள் "Boss lady" யாக தான் இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, காதல் வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்களை கட்டுப்படுத்துவது யாருக்கும் இயலாததாக இருக்கும்.

அப்படி எதிர்காலத்தில் சிறந்த தலைவிகளாக மாறக்கூடிய அதிர்ஷ்டம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்த பெண்கள், போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படுவதால், உக்கிரமான மற்றும் துடிப்பான ஆளுமைகளுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் சிறந்த தலைமைத்துவ குணங்கள் மற்றும் நிதி முகாமைத்துவ ஆற்றல் என்பன இயல்பாகவே இருக்கும்.
இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராணியாக இருக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.தங்கள் இலக்குகளை அச்சமின்றித் தொடர்கிறார்கள், அவர்களின் இந்த ஆளுமை தலைவிகளாக மாற காரணமாக இருக்கும்.
சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள், அரச மற்றும் கவர்ச்சிகரமான ஆற்றலை வெளிப்படுத்துகிறார்கள்.
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் ஒரு காந்த இருப்பைக் கொண்டுள்ளனர், அதனால் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கிறார்கள். அவர்கள் மற்றவர்களை அடக்கியாளும் திறபை பிறப்பிலேயே கொண்டிருப்பார்கள்.
அவர்களின் நம்பிக்கையும் அங்கீகாரத்திற்கான விருப்பமும் பெரும்பாலும் அவர்களை தலைமைப் பாத்திரங்களுக்குத் தூண்டுகின்றன, இவர்களை கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறிவிடுவார்கள். இவர்கள் ராணியாக இருக்கும் இடத்தை மட்டுமே இந்த ராசியினர் விரும்புகின்றார்கள்.
மகரம்

சனியால் ஆளப்படும் மகர ராசியினர் வாழ்வில் நீதி மற்றும் நேர்மைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை அவர்களின் சுதந்திரத்துக்கும் கொடுப்பார்கள்.
கடின உழைப்பாளியாக இருக்கும் இவர்களின் இயல்பு மற்றும் இலக்குகளுக்கான மூலோபாய அணுகுமுறை பெரும்பாலும் அவர்களை நிறுவனங்களின் தலைமையில் அமரவைக்கின்றது.
மகர ராசிக்காரர்கள் மற்றவர்களை வெற்றியை நோக்கி வழிநடத்த தேவையான அனைத்து ஆளுமைகளையும் குறைவின்றி கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு அதிகாரம் மிக்க பதவி இவர்களை நிச்சயம் தேடி வரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |