உலகின் சிறந்த உணவு நகரங்கள்... என்னென்ன ஸ்பெஷல்?
Foodie என்கிற உணவு பிரியர்கள் சாலையோர கடைகள் முதல் மிகவும் பெரிய ஹோட்டல்கள் வரை அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்கள். அதுமட்டுமின்றி எந்தெவொரு வகையான உணவையும் ருசித்தே ஆக வேண்டும் என்றும் இருப்பார்கள்.
நம்மில் பலர் விரும்பக்கூடியது என்னவென்றால் அனைத்து வகையான உணவையும் ருசித்தி விட வேண்டும். அதுமட்டுமின்றி எந்த ஒரு புது வகையான உணவு trend-ல் இருப்பது தெரியவந்தாலோ அதை உடனடியாக ருசித்து விட வேண்டும் என்று எண்ணுவோம்.
இதுபோன்ற ஆசை உடையவர்களுக்காக `உலகின் சிறந்த உணவு நகரங்கள்' பட்டியலை பயண வழிகாட்டி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
உணவில் சிறந்த நகரங்கள்
முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ள நகரங்களானது மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ ஆகிய 5 இந்திய நகரங்களே ஆகும்.
35 வது இடத்தை மும்பையும், 39 வது இடத்தை ஐதராபாத்தும் பிடித்து முதல் 50 இடங்களுக்குள் நுழைந்திருக்கின்றன. டெல்லி, சென்னை மற்றும் லக்னோ நகரங்களானது 56, 65 மற்றும் 92 வது இடத்தை பிடித்துள்ளது.
இத்தாலி நாடானது இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ரோம், போலோக்னா மற்றும் நேபிள்ஸ் ஆகியவை நகரங்களின் பட்டியலிலும் முதல் 3 இடத்தை பிடித்திருக்கின்ற நாடு இத்தாலியே ஆகும். மேற்குறிப்பிடப்பட்ட மூன்று நகரங்களும் பாஸ்தா, பீட்சா மற்றும் சீஸ் உள்ளிட்டவைக்கு பெயர் போனவையாகும்.
ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா, ஜப்பானில் உள்ள டோக்யோ, சீனாவில் உள்ள ஹாங் காங், இத்தாலியில் உள்ள டுரின், துருக்கியில் உள்ள காசியான்டெப், இந்தோனேசியாவில் உள்ள பாண்டுங் உள்ளிட்டவை அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இத்தாலிக்கு அடுத்ததாக முதல் 10 இடங்களுக்குள் இருக்கக்கூடிய நகரங்காளாக ஜப்பான், கிரீஸ், போர்ச்சுக்கல், சீனா, இந்தோனேசியா, மெக்சிகோ, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெரு உள்ளது.
பாவ் பாஜி, தோசை, வடை பாவ், சோலே பட்டூரே, கபாப், நிஹாரி, பானி பூரி, சோலே குல்சே, பிரியாணி மற்றும் பலவிதமான சாட் வகை போன்ற உணவுகளானது மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.
11 வது இடத்தை இந்தியா பிடித்திருக்கும் நிலையில், கடைசி 10 இடங்களில் கஜகஸ்தான், அல்பேனியா, கிர்கிஸ்தான், மியான்மர், நியூசிலாந்து, சவுதி அரேபியா, வடக்கு அயர்லாந்து, பஹாமாஸ், டொமினிகன் குடியரசு, வேல்ஸ் மற்றும் கானா உள்ளிட்ட நகரங்கள் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |