நாக்கு சொல்லும் இரகசியம்: உங்கள் நாக்கு இப்படி இருந்தால் நீங்கள் தான் அதிஷ்டசாலி!
பொதுவாக ஜாதக, சாஸ்திரங்கள் மீது சிலருக்கு அதீத நம்பிக்கை இருக்கும். பிறந்த திகதி, இலக்ணத்தை வைத்து ஜாதகம் பார்த்திருப்போம், அதற்குப் பிறகு கிளியை வைத்து ஜாதகம் பார்த்திருப்போம் ஏன் கை ஜாதகம் கூட பார்த்திருப்போம்.
இவற்றுக்கெல்லாம் கொஞ்சம் மேலே சென்றால் ஒருவரின் நாக்கை வைத்து அவர்களின் குணங்கள் கணிக்கப்படும் என்பது தெரியுமா?
நாக்கின் நிறமும், வடிவமும்
ஒருவரின் நாக்கு சிவப்பு, மெல்லிய, அடர்த்தியான நாக்கை கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையின் எத்துறையிலும் சிறந்து விளங்குவார்களாம். மேலும், இவர்கள் எளிதில் எல்லா விடயங்களிலும் வெற்றி பெறுவார்கள். தொழிலும் உயர் பதவிகளைப் பெற்று ஆரொக்கியமாக வாழ்வார்களாம்.
தடித்த நாக்கை உடையவர்கள் பேசும் போது எப்போதும் கடுமையாக பேசுவார்கள், மனதில் எவ்வித தீய எண்ணமும் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் பேசும் போதும் கொஞ்சம் கவனமாக பேசினால் நல்லது.
நாக்கு இலேசாக மஞ்சள் மாதிரி நிறத்தில் இருந்தால், அவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு இருக்கின்றதென்று அர்த்தம், இவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். மேலும், பகுத்தறியும் தன்மையும் குறைவுதான்.
நாக்கில் கரும்புள்ளி கொண்டவர்கள், தொழில் செய்யும் இடத்தில் பல சிரமங்களை சந்திப்பார்கள், ஒரே இடத்தில் பல காலம் வேலை செய்ய மாட்டார்கள். எப்போதும் இவர்களுக்கு தொழில் என்றால் பிரச்சினையாகத்தான் இருக்கும்.
ஒரு சிலருக்கு நாக்கு வெவ்வேறு நிறங்களில் இருந்தால் அவர்கள் பேச்சாற்றால் மிக்கவராக இருப்பார்கள். தீய பழக்கவழக்கங்களிற்கு அடிமையாகிவிடுவார்கள். விதிகளை மதிக்கமாட்டார்.
நாக்கில் மச்சம் உள்ளவர்கள் மிகவும் அதிஷ்டகாரர்களாக இருப்பார்கள். வசீகரமாக பேசி அனைவரையும் கவருவார்கள். அரசியலில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பல இராஜதந்திரங்களை கொண்டவர்கள். பல செயல்களை தலையில் போட்டுக் கொள்வார்கள் மேலும், இவர்களுக்கு சுயமதிப்பு குறைவாக இருக்கும்.