Tomato soup: அனைத்து நோய்களையும் ஓரம் கட்ட வேண்டுமா? இந்த ஒரு சூப் போதும்
நாம் உடலை சத்தாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு பல சத்துள்ள பழங்களையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய பதிவல் ஆரோக்கியமான தக்காளி சூப் எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்கப்பொகிறோம். தக்காளியில் விட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. அதேபோல பொட்டாசியம் சத்தும் உள்ளது.
வைட்டமின் சி சத்தானது சரும ஆரோக்கியத்திற்கு உதவியாக அமைகிறது. வைட்டமின் கே சத்தானது ரத்தத்தை உறைய வைப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும்.
தேவையான பொருட்கள்
- 6-7 - தக்காளி
- 1 - நறுக்கிய பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் - நெய்
- ½ தேக்கரண்டி - சர்க்கரை தூள்
- 1 தேக்கரண்டி - சீரகம்
- ⅓ தேக்கரண்டி - கருப்பு உப்பு
- ½ தேக்கரண்டி - கருப்பு மிளகு
- காயம் - ஒரு சிட்டிகை
- ½ - இஞ்சி
- 2-3 - பூண்டு
- கிராம்பு
- உப்பு- சுவைக்கேற்ப
செய்யும் முறை
தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு இது அனைத்தையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அனைதையும் நறுக்கி பச்ச மிகளாயும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் சேர்த்து, அதனுடன் சீரகம் மற்றும் காயப்பொடி சேர்க்க வேண்டும்.
இதனுடன் தக்காளி விழுதையும் சேர்க்க வேண்டும். இதன் பின்னர் இதை கிளற வேண்டும். பின்னர் இதனுடன் மிளகு, சர்க்கரை தூளுடன், கருப்பு உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இது நன்றாக கொதித்து வந்ததும் கொத்தமல்லி இலை மேலால் போட்டு பாத்திரத்தில் இட்டு பரிமாறினால் ஆரோக்கியமான சுவையான சூப் தயார். இது உடலில் அதிகமாக இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள், உடலில் சேராமல் தடுக்கும் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படுவதையும் குறைக்கும்.
அதனால் இதயத்தில் ஏற்படும் இதய நோய்கள், கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இந்த தக்காளியில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.
ஆகவே தக்காளி சூப்பை குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.தினமும் தக்காளி சூப்பை குடித்து வந்தால் சருமம் நன்கு அழகாக பட்டுப் போன்று வரும். இதை தவிர முகப்பரு மற்றும் சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறம் நீங்கிவிடும்.
அழகை மட்டும் பெறாமல், அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே எலும்புகள், பற்கள் மற்றும் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது.
தக்காளி சாப்பிடுவதன் நன்மைகள்
தக்காளியில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்ற கரோட்டினாய்டு, அவற்றுக்கு நல்ல சிவப்பு நிறத்தை அளிப்பதோடு, சூரியனின் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன.
நமது lycopene செல்கள் சேதமடைவதை தடுக்கவும் உதவும். தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 20 சதவீதத்ததால் குறைத்துக்கொள்ள முடிகிறது.
மேலும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் அது பெரிதும் துணைப்புரிகின்றது.இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகமாகவுள்ளதால் குருதிச் சோகையை குணப்படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
தக்களியில் அதிகமாக காணப்படும் பீட்டா கரோட்டின் எனும் வேதிப்பொருள் கண்பார்வை தொடர்பான பிரச்சினைகளை சீர்செய்கின்றது.இதில் ஏகப்பட்ட சத்துக்கள் காணப்பகின்றன.
இது இரத்தத்தைச் சுத்திகரிக்கவும், சீரான ரத்த ஓட்டத்துக்கும் பயன்படுகிறது. இது தவிர இதை தினமும் சாப்பிடுவதால் நமது சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை பாதுகாக்கலாம்.
இதிலிருக்கும் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் நமது எலும்பை உறுதியாகவும் திடமாகவும் மாற்றுகின்றன. கண்பார்வைக்கு முக்கிய பங்கு வகிப்பதில் தக்காளியும் ஒன்றாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |