வெறும் வயிற்றில் தக்காளி சாறு குடிக்கலாமா? மருத்துவ விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் புதிய நாள் தான்.
காலை முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை செய்யும் ஒவ்வொரு வேலையும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும். அதிலும் உணவில் கட்டாயம் கவனம் தேவை.
ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்து கொண்டால் மாத்திரமே நோயின்றிய வாழ்க்கையை வாழலாம்.
காலையில் எழுந்தவுடன் சிலர் ஆரோக்கிய ஆர்வலர்கள் வெறும் வயிற்றில் தக்காளி சாற்றை குடிப்பார்களாம்.
இதனால் அன்றைய தினம் ஆரோக்கியமாகவும் உடல் ஆக்டிவாக இருப்பதை உணர்கிறார் என கூறுகிறார்கள்.
தக்காளியை உணவில் சேர்ப்பார்கள் என கேள்விபட்டிருப்போம் ஏன் திரவமாக்கி காலையில் குடிக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தக்காளி சாறு
1. வெறும் வயிற்றில் தக்காளி சாற்றை உட்கொள்வதால் அத்தியாவசியமான ஊட்டசத்துக்கள் உறிஞ்சப்படுகின்றது. ஏனெனின் இந்த சாற்றில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கின்றது.
2. தக்காளி சாறுடன் நாளைத் துவங்குவதால் உடலின் pH அளவை சமநிலைப்படுத்தப்படுகின்றது. அத்துடன் உடல் அமைப்புகளின் உகந்த செயல்பாட்டை ஆதரிக்கும் கார சூழலை உருவாக்குகிறது.
3. வயிற்றிலுள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றது. குடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து செரிமானத்திற்கு உதவியாக இருக்கின்றது.
4. தக்காளியில் செரிமான நொதிகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது வயிற்றிலுள்ள உணவை செரிமானத்திற்கு உள்ளாக்கி விரைவாக மலமாக வெளியேற்ற உதவியாக இருக்கின்றது.
5. கலோரிகள் உண்ணாமல் இருக்கும் நாட்களில் உங்களின் வேலைகளை செய்வதற்கான சக்தியை தக்காளி ஜீஸ் கொடுக்கின்றது. இதனால் அதிகமாக பசிக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |