அப்பாவை மிரட்டி வீட்டில் அட்டகாசம் செய்யும் குட்டி பொண்ணு.. மிரண்டு நிற்கும் நெட்டிசன்ஸ்!
அப்பாவை மிரட்டி வீட்டில் அட்டகாசம் செய்யும் குட்டி பொண்ணுவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீட்டில் ஒரு சின்ன குழந்தை இருந்தாவே வீடு முழுவதும் கலகலவென இருக்கும்.
அவர்கள் பேசும் மழலை பேச்சால் பெற்றார்கள் உட்பட வீட்டில் கோபமாக இருப்பவர்கள் கூட இறங்கி விடுவார்கள்.
மிரட்டும் குட்டி பொண்ணு
அந்த வகையில் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருக்கும் சிறுமியொருவர் தன்னுடைய அப்பாவிடம் சண்டையிடும் காட்சியொன்று வைரலாகி வருகின்றது.
அதில் அப்பா பேச பேச பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் குறித்த சிறுமியின் வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் தெளிவாக வரவில்லை.
ஆனாலும் தன்னுடைய அப்பாவிடம் கடுமையான வாக்குவாதம் செய்கிறார். பின்னர் கடுப்பாட்டை இழந்த சிறுமி வாயில் கை வைத்து அப்பாவின் வாயை மூடுமாறு கூறுகிறார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். “ குட்டி பொண்ணுக்கு எவ்வளவு கோபம்..” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |