கையில் கட்டுடன் நடிகை ஜெனிலியா... விளையாட்டு வினையானதால் ஏற்பட்ட அசம்பாவிதம்
குழந்தைகளுக்கு நடிகை ஜெனிலியா எடுத்த ரிஸ்க் தற்போது கையில் கட்டுப்போட்டு இருக்கும் காணொளியினை வெளியிட்டுள்ளார். தமிழில் 2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் ஜெனிலியா. பின்பு முன்னனி நடிகரான விஜய்யுடன் நடித்த இவர் இந்தி நடிகர் ரிதீஸ் என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ‘Its My life ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். இரண்டு குழந்தைக்கு தாயானாலும் இன்னும் அதே இளமையுடன் இருந்து வரும் இன்னும் தற்போதும் தனது சுட்டித்தனத்தை இழக்காமல் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் ஸ்கேட்டிங் செய்த போது விழுந்து வாரி கை எலும்பை முறித்துக்கொண்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அந்த பதிவியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நான் ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். காரணம் என்னுடைய குழந்தைகளுக்கு நான் கம்பெனியாக காரணம் என்று எண்ணினேன். அப்போது ஏற்பட்டது தான் இந்த சம்பவம். இன்ஸ்டாகிராமில் சக்சஸ் ஸ்டோரி மட்டும் தான் போடவேண்டுமா என்ன.
ஒரு சில நேரங்களில் பறப்பதற்கு முன்னாள் நீங்கள் விழலாம், அதிலிருந்து எப்படி எழுகிறீர்கள் என்பது தான் முக்கியம். நான் வெற்றி பெறும் வரை முயற்சி செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.
.@geneliad hops on the #Pawri trend with an injured hand ?#GeneliaDeshmukh #GeneliaDSouza #Tollywood #TollywoodActress #Bollywood #BollywoodActress pic.twitter.com/dS53fhMTcZ
— Hyderabad Times (@HydTimes) March 9, 2021