பஞ்சாயத்தில் நிறுத்தி அசிங்கப்படுத்திய கண்ணம்மா! திடீரென பாரதி கொடுத்த ஷாக்
பாரதி கண்ணம்மா சீரியலில் பஞ்சாயத்து முன்பு அசிங்கப்படுத்தப்பட்ட பாரதி ஊரை விட்டு ஒதுக்கிய வைத்தும் தற்போது மாஸாக ஊருக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளிவந்த நிலையில், குறித்த சீரியல் இத்துடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாரதியையும், அவரது குடும்பத்தையும் விட்டு யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனது சொந்த கிராமத்திற்கு கண்ணம்மா தனது அப்பாவுடனும், குழந்தைகளுடனும் சென்றுள்ளார்.
அங்கு பள்ளி ஒன்றில் சமையல் செய்யும் வேலையினை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், வாடகைக்கு வீடு ஒன்றினையும் பார்த்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட பாரதி குறித்த கிராமத்திற்கு வந்துள்ளார்.
கண்ணம்மாவை தேடிவந்த பாரதி
அங்கு பாரதியை பஞ்சாயத்து முன்பு நிறுத்தினார் கண்ணம்மா. அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கவும், ஊருக்கு திரும்பி செல்லவும் ஊர்காரர்கள் கூறினர். ஆனால் இவற்றினை காதில் போட்டுக்கொள்ளாத பாரதி தனது பாணியில் கலக்கியுள்ளார்.
ஆம் பாரதி கெத்தாக கார் ஒன்றில் கண்ணம்மா இருக்கும் ஊருக்குள்ளே ஊர்வலமாக வந்துள்ளார். இந்த காட்சி தற்போது ப்ரொமோவாக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.