பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா இறுதிச் சடங்கு: பொம்மையை பயன்படுத்தினார்களா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சமீபத்தில் லட்சுமி அம்மா மரணம் மற்றும் இறுதிச்சடங்கு காட்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரும் கவலையடைய வைத்தது.
ஆனாலும் டிஆர்பிக்காக இறுதி சடங்குகள் செய்வது, சுடுகாட்டுக்கு தூக்கி செல்வது உள்ளிட்ட காட்சிகளை எல்லாம் எடுப்பீர்களா என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த தொடரில் மீனா ரோலில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் சமீபத்தில் வெளியிட்டு இருந்த வீடியோவில், லட்சுமி அம்மாவுக்கு பதில் டூப்பாக பயன்படுத்திய பொம்மை என்று ஒரு பொம்மையை காட்டியிருந்தார். இதனால் டம்மி போட்டு தான் எடுத்தார்கள் என்ற வதந்தி பரவ ஆரம்பித்தது.
தற்போது இதுகுறித்து ஹேமா கூறுகையில், அனைத்து காட்சிகளிலும் ஷீலா அம்மா தான் நடித்தார், டம்பி எதுவும் போடவில்லை என்றும், அந்த பொம்மை வைத்திருந்ததை மட்டும் தான் அக்காட்சியில் காட்டினேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.