இன்று தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! குழப்பத்தில் வியாபாரிகள்
தங்கம் விலை கடும் ஊசலாட்டத்தில் இருந்து வருகிறது. இரு நாட்களாக விலை சரிந்தநிலையில் இன்று சற்று விலை உயர்ந்துள்ளது.
தங்கம் இன்றைய விலை
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது, சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,725 ஆகவும், சவரன், ரூ.37,800 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.4,725ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.37,840ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.55 குறைந்தது, சவரனுக்கு ரூ.440 வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5ரூபாயும், சவரனுக்கு 80ரூபாயும் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு 70 காசுகள் அதிகரித்து, ரூ.59.50ஆகவும், கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.59,500 ஆகவும் உயர்ந்துள்ளது