நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! இன்று தங்கம் விலை சரிவு: காரணம் என்ன?
தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏறுமுகத்தில்இருந்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று குறைந்துள்ளது.
உலகச் சந்தைகளில், அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.
தங்கம் விலை என்ன?
இந்தியாவில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 47,750 ஆக உள்ளது. நேற்றைய விலையிலிருந்து ரூ.250 குறைந்துள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 52,100 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ. 59,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.1,300 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை
தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து, ரூ. 4,805 ஆகவும், சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.38,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,242 என சவரனுக்கு ரூ. 41,936 ஆக விற்பனையாகிறது.