கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில், கடந்த வாரத்தில் தங்கல் விலை அதிகரித்துக்கொண்டே இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதனிடையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கம் ஒரு பவுன் ரூ.38, 200 என்ற விலையிலேயே தொடர்ந்து விற்பனையானது.
இதன்பின்னர் கடந்த 30-ந்தேதி ரூ.38,280 ஆக உயர்ந்தது. அதன்பிறகு 31-ந்தேதி மீண்டும் ரூ.38,200 ஆக குறைந்தது. கடந்த நாள் முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.37,920 ஆக குறைந்தது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயர்வடைந்து ரூ.38,400 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் நேற்று ரூ.4,760-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.4,810-க்கு விற்கப்படுகிறது.
இதேபோன்று வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது.