இன்று சரசரவென குறைந்த தங்கத்தின் விலை! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மக்கள்
சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்து பவுன் 40 ஆயிரத்தினை நெருங்கிய நிலையில் இன்று கிடுகிடுவென குறைந்துள்ளது.
ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால் நேற்று பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் நேற்று வரலாறு காணாத அளவிற்கு தாறுமாறாக உயர்ந்தது.
நேற்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மூன்று முறை ஏற்றம் இருந்த நிலையில், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இன்றும் தங்கம் விலை அதிகரிக்கும் என்று நினைத்த மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
ஆம் நேற்றைய தினத்தில் சவரனுக்கு ரூ.1856 உயர்ந்து சரவன் ரூ. 39,608க்கு விற்பனையானது. ஆனால் இன்றைய தினத்தில் அதிரடியாக ரூ 1200 குறைந்து சவரன் 38 ஆயிரத்து 404 ரூபாக்க்கு விற்கப்படுகின்றது.