கோபியை கம்பல் செய்து மருமகள் ஸ்தானத்தை தட்டி பறிக்க திட்டம் போடும் ராதிகா! நடந்தது என்ன?
கோபியை திட்டம் போட்டு தன்வசப்படுத்தி பாக்கியாவை வீட்டை விட்டு துறத்துவதற்கு ராதிகா புதிய திட்டமொன்றை போட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் டுவிஸ்ட்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் உள்ள கதாநாயகனுக்கு இரண்டு மனைவிகளை கொடுத்து வீட்டில் நடக்கும் உண்மையான அழகாக சீரியலில் காட்டி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து ராதிகாவின் கதாபாத்திரத்தில் கொஞ்சம் கோபமாகவும் வீட்டில் குட்டைய குழப்பும் வகையிலும் நடந்து வருகிறார்.
இனியாவின் செயற்பாடுகளில் இருக்கும் சந்தேகங்களை வெளிப்படையாக வீட்டில் கத்திய காரணத்தால் இனியா மனமுடைந்து பாக்கியாவிடம் சென்று,“ நீ தான் நல்ல அம்மா” என கட்டிபிடித்து அழுதுள்ளார்.
பாக்கியாவை வெளியில் அனுப்ப திட்டம் போடும் ராதிகா
கோபியின் மன உளைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தினமும் குடிக்க ஆரம்பித்துள்ளார். இவரால் பாக்கியாவை மறக்கவும் முடியவில்லை, ராதிகாவுடன் சந்தோசமாக வாழவும் முடியவில்லை.
இந்த நிலையில், தற்போது ராதிகாவிற்கான அந்த இடம் கிடைக்கவில்லை என்பதால் தினமும் கோபியுடன் சண்டை போட்டு நா தான் மருமகள் எனக்கு அந்த இடம் கிடைக்க வேண்டும் என சண்டையிட்டு வருகிறார்.
இவர்களின் இந்த வாக்குவாதம் தொடர்ந்து கோபி வீட்டில் ஏன் பாக்கியா இருக்க வேண்டும். அவளை வெளியே போக சொல்லுங்க எனவும் பல முறை வற்புறுத்தி வருகிறார்.
ராதிகாவின் இந்த செயல் கோபியின் மன அழுத்தத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
இதனை பார்த்த பாக்கியலட்சுமி ரசிகர்கள், பரபரப்பான தருணங்களுக்காக காத்திருக்கிறார்கள்.