நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி ...தங்கம் விலை அதிரடி சரிவு!
ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. இன்றைய (ஆகஸ்ட் 27) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் விலை நிலவரம் அமைந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை குறைந்த நிலையில், நேற்று எந்தவித மாற்றமும் இன்றி அதற்கு முந்தைய நாளின் விலையே தொடர்ந்தது.
அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,940-ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,520-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.

ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,710-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,01,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |