உங்கள் பகுதியில் 5G சேவை இருக்கிறதா? உங்கள் ஸ்மார்ட்போனில் Enable செய்வது எப்படி?
தற்பொழுது அலைபேசி மற்றும் இணைய தேவைகளுக்காக 5G அலைக்கற்றை பயன்பாடு பிரபல்யமடையத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் உங்களது பகுதியில் 5G அலைக்கற்றை தொழில்நுட்ப வசதி உண்டா என்பதனை எவ்வாறு அறிந்து கொள்வது?
இந்தியாவின் 13 நகரங்களில் 5G சேவையை தொடர்பாடல் சேவை வழங்கும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
பாரதீ எயார்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சேவையை வழங்கி வருகின்றன.
எயார்டெல் நிறுவனம் எட்டு நகரங்களில் 5G சேவையை வழங்கி வருகின்றது. உரிய மென்பொருள் அப்டேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் அலைபேசிகளில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
5G சேவையை Enable செய்வது எப்படி?
Open Settings → Connections → Mobile networks → Network mode – choose 5G/LTE/3G/2G (auto connect)
Google Pixel/stock Android phones
Open Settings → Network & Internet → SIMs → Preferred network type → Choose 5G
Open Settings → Wi-Fi & networks → SIM & network → Preferred network type → select 2G/3G/4G/5G (automatic)
Oppo
Open Settings → Connection & Sharing → Tap on SIM 1 or SIM 2 → Preferred network type – select 2G/3G/4G/5G (automatic)
Open Settings → Connection & Sharing → Tap on SIM 1 or SIM 2 → Preferred network type – select 2G/3G/4G/5G (automatic)
Vivo/iQoo
Open Settings → Tap on SIM 1 or SIM 2 → Mobile network → Network Mode – choose the 5G mode
Xiaomi/Poco
Open Settings → SIM card and mobile networks → Preferred network type → choose Prefer 5G
இந்த செயன்முறைகளை பின்பற்றினால் உங்களது அலைபேசியில் 4G என்பதற்கு பதிலாக 5G என்னும் அடையாளம் காணப்பட்டால் அப்பொழுது உங்களது அலைபேசி 5G சமிக்ஞையை கடத்துகிறது என்பதுடன் நீங்கள் இருக்கும் பகுதியில் 5G சமிக்ஞை காணப்படுகின்றது.
உங்கள் பகுதியில் 5G
உங்களது ஸ்மார்ட் அலைபேசியில் இந்த வசதி கிடைக்காவிட்டால் எந்த இடங்களில் இந்த சேவை கிடைக்கும் என்பது பற்றிய தகவல்களை எயார்டெல் நிறுவனம் வழங்குகின்றது.
இதற்கென தனியான Tool ஒன்றை எயார்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Airtel Thanks என்ற செயலியை தரவிறக்கம் செய்து இன்ஸ்டோல் செய்து கொள்ளவும்.
இந்த செயலியை திறந்து 5G வசதி காணப்படுகின்றதா என்பதனை கண்டறிந்து கொள்ள முடியும். “You are in a 5G city”என்ற வாசகம் உங்களது அலைபேசியில் வந்தால், உங்களது பிரதேசத்தில் 5G வசதி உண்டு என அர்த்தப்படுகின்றது.
இரண்டாவதாக உங்களது அலைபேசியில் 5G வசதி உண்டா இல்லையா என்பது குறித்த தகவலை தெரிந்து கொள்ள முடியும்.
தற்போதைக்கு விமான நிலையங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே இந்த 5G சேவை காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.