பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களை குஷிப்படுத்திய பிரபலம்! என்ன சொன்னார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டிற்கு ப்ரீஸ் டாஸ்க் மூலம் உள்ளே சென்ற பிரபல நடிகை ஜஸ்வர்யா ராஜேஸ் போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
விறுவிறுப்பாகும் பிக்பாஸ் வீடு
பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் சுமார் 21 பிரபலங்கள் களமிறங்கியிருந்தார்கள்.
மேலும் தற்போது வரைக்கும் 10 மேற்பட்ட போட்டியாளர்கள் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார்கள்.
தற்போது இறுதி காலக்கட்டத்தில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 சுமார் 9 போட்டியாளர்களுடன் விறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
நாட்கள் மிக வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறதால் இன்னும் 20 நாட்களே உள்ளது பிக் பாஸ் வீடு நிறைவு பெறுவதற்கு, இதனால் போட்டியாளர்கள் டாஸ்க்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
ப்ரீஸ் டாஸ்க்
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்களை வரவழைத்து அவர்களை மன ரீதியாக வலுவுட்டுகிறார்கள்.இதனால் போட்டியாளர்கள் தங்களின் உறவினர்களை பார்த்த பின்னர் கத்தி கதறி அழுதுள்ளார்கள். இன்னும் சிலர் நுனுக்கமாக விளையாட சில நுட்பங்களை கூறிச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து மணிகண்டனை பார்ப்பதற்கு அவரின் மனைவி, அம்மா, மகன் மற்றும் நடிகை ஐஸ்வர்யாவும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஐஸ்வர்யா ராஜேஸின் கருத்து
இதன்போது ஐஸ்வர்யா ராஜேஸ் "இந்த சீசன் வந்து சூப்பர் ஹிட்டு. இதுக்கு அப்புறம் இன்னும் கடினமா நீங்க விளையாடனும்ன்னு நான் நெனைக்கிறேன்.
மேலும் என்ன சண்டை போட்டாலும் ஒரு ரூல் வெச்சுக்கோங்க. என்ன சண்டை நடந்தாலும் வீட்டுல ஒண்ணா உக்காந்து சாப்பிடுங்க” என தன்னுடைய தம்பி உட்பட அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த டாஸ்க் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.