நடிகை சாந்தினி கருக்கலைப்பு விவகாரம்- மணிகண்டன் வழக்கில் 3 பேருக்கு சம்மன் நோட்டீஸ்!
கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்த நடிகைக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதன்பின்னர், தன் கணவர் மீது பொய் புகார் கூறி தங்கள் குடும்பத்தின் மீது அவதூறு பரப்பி வருவதாக முன்னாள் அமைச்சரின் மனைவி, நடிகை மீது பகீர் புகார் அளித்துள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து முன் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிகண்டனை வருகிற 9-ந்தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் அவரது உதவியாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. இச்சம்மனில் 3பேரையும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.