பிக்பாஸ் கொடுத்த சுவாரஷ்யமான டாஸ்க்...! இணையத்தை திணற விட்ட கதிரவன்
பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான கதிரவன் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது, இதில் ஆரம்பத்தில் எண்ணற்ற கலைகளை சார்ந்த பிரபலங்கள் கலந்துக் கொண்டிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஆரம்பித்து சுமார் 65 நாட்களை கடந்துள்ளது, சுமார் 10 போட்டியாளர்கள் குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே கதிரவன் ஒரு அமைதியான பலதிறமைக் கொண்ட போட்டியாளராக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.
கதிரவனின் லீலைகள்
பிக் பாஸில் கொடுக்கப்படும் டாஸ்க்கை எந்தவிதமான சலனமும் இன்றி நிறைவேற்றுகிறார்.
கடந்த வாரம் கொடுத்த டாஸ்க்கிலும் மைக்கேல் ஜாக்சன் போல் நடனமாடி போட்டியாளர்களிடம் அதிகம் பணம் பெற்று டாஸ்க்கை நிறைவு செய்துள்ளார்.
மற்றைய போட்டியாளர்களுடன் சண்டையிடுவது, தேவையற்ற விதமாக பழகுவது என எந்தவிதமான எதிர்மறையான ஆற்றல்களுமின்றி செயற்பட்டு வருகிறார்.
பிக் பாஸ் தரமாக வைத்து செய்த கதிர்
இந்நிலையில் இன்றைய தினம் கொடுக்கப்பட் டாஸ்க்கில் சுமார் ஐந்து 10 வயது குழந்தையைப்போல் விடையளிக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆத்திசூடியின் முதல் மூன்று வரியை படிக்குமாறு பிக் பாஸ் டாஸ்க் கொடுத்தார். இதற்கு கதிர், ஆத்திசூடி பாடலை பாடியுள்ளார்.
இதனை பார்த்த பிக் பாஸ் மற்றும் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் கதிரை வச்சு செய்துள்ளார்கள்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.