பிக் பாஸ் கொடுத்த சுவாரஷ்யமான டாஸ்க்... பிக் பாஸை எச்சரித்த தாமரை! பரிதாபத்திற்கு யார் காரணம்?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பெரிய அளவில் டாஸ்க்குகள் இல்லாததால் சற்று போரடிக்க வைத்தது.
வழக்கம் போல் வனிதாவின் சண்டைகள், மோதல்கள் தான் ப்ரோமோ உட்பட அனைத்திலும் காட்டப்பட்டது.
வழக்கமான பிக்பாஸ் தானே இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கு என ரசிகர்கள் பலர் அலுத்துக் கொண்டனர்.
இதனால் ரசிகர்களை கவர்வதற்காக இரண்டாவது வாரத்தில் கலகலப்பையும், சுவாரஸ்யத்தையும் கூட்டி விட்டார் பிக்பாஸ்.
இந்த வாரத்தின் ஆரம்பித்திலேயே வனிதாவை டிரெண்டிங் பிளேயர் என அறிவித்து அவரை நாமினேட் செய்ய முடியாது என்றார்.
கடுமையான திருடன் பொலிஸ்க் டாஸ்க்கை கொடுத்து போட்டியாளர்களை அலறவிட்டார். ஆனால் நேற்றுடன் அந்த டாஸ்க் முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு தான் சுவாரஷ்யமே... தாமரையை தொடர்ந்தும் ஜூலியின் வாயாக இருக்குமாறு பிக் பாஸ் அறிவித்து விட்டார்.
இதனால் டாஸ்க்கை முடிக்குமாறு தாமரை பிக் பாஸையே எச்சரித்துள்ளார். இந்த டாஸ்க்கில் ஜூலி என்ன பேநுகின்றாரோ அதை தாமரை பேச வேண்டும்.
ஜூலியின் வாயாகவும் இருக்க வேண்டும். அவரின் வாயகவும் இருக்க வேண்டும் என்பதால் போட்டி விறுவிறுப்பாகியுள்ளது.